துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 போட்டி தொடரின் இன்றைய 22வது லீக் ஆட்டத்தில் ஸ்டீவன் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.
இறுதியாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 185 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி களம் இறங்கியது.
இறுதியில் ராஜஸ்தான் அணி 19.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.