TAMIL

2வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் சென்னையில் நடந்த முதலாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.



இந்த நிலையில் இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2வது ஒரு நாள் போட்டி துறைமுக நகரான விசாகப்பட்டினத்தில் இன்று பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் கீரோன் பொல்லார்டு டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளார்.

அவர் கூறும்பொழுது, அணியில் சுனில் ஆம்ப்ரீசுக்கு பதிலாக எவின் லூயிஸ் சேர்க்கப்பட்டு உள்ளார்.

இதேபோன்று ஹெய்டன் வால்ஷ் ஜூனியருக்கு பதிலாக காரி பியரே அறிமுக ஆட்டக்காரராக விளையாடுகிறார் என கூறியுள்ளார்.



இந்திய அணியில் சிவம் துபேவுக்கு பதிலாக ஷர்துல் தாக்குர் விளையாட இருக்கிறார். இந்த தொடரை கைப்பற்றுவதற்கு இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே தீரவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Related Articles

Check Also

Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker