IPL TAMILTAMIL

ஐ.பி.எல். இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி முழு அட்டவணை வெளியீடு

கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்ட 13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், சார்ஜா, அபுதாபி ஆகிய இடங்களில் வருகிற 19ந்தேதி முதல் நவம்பர் 10ந்தேதி வரை நடைபெறுகிறது.

இந்த போட்டிக்காக அமீரகம் சென்றுள்ள 8 அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கி விட்டன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சேர்ந்த 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாலும், வெளிநாட்டு வீரர்களின் வருகையை கணக்கில் கொள்ள வேண்டியது இருப்பதாலும், போட்டி நடைபெறும் இடங்களில் வெவ்வேறான தனிமைப்படுத்துதல் விதிமுறை உள்ளதாலும் அட்டவணை வெளியாவதில் காலதாமதம் ஏற்படுவதாக தகவல் வெளியாகின.

இந்த நிலையில், ஐ.பி.எல். சேர்மன் பிரிஜேஷ் பட்டேல் ஐ.பி.எல். போட்டிக்கான அட்டவணை இன்று வெளியிடப்படும் என்று கூறினார். இதன்படி, ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டிகளுக்கான முழு அட்டவணை இன்று வெளியிடப்பட்டது.

இதில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வருகிற 19ந்தேதி நடைபெறும் போட்டியில் விளையாடுகின்றன.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker