CRICKETLATEST UPDATESNEWSTAMIL

2-வது டெஸ்ட் போட்டி நியூசிலாந்து 460 ரன் குவித்தது – வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்

நியூசிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நடைபெற்று வருகிறது.

முதலில் விளையாடிய நியூசிலாந்து நேற்றைய முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 294 ரன் எடுத்து இருந்தது. ஹென்றி நிக்கோலஸ் அபாரமாக ஆடி சதம் அடித்தார். அவர் 117 ரன்னில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இன்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நியூசிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது.

நிக்கோலஸ் தொடர்ந்து அபாரமாக ஆடி 174 ரன் குவித்து ஆட்டம் இழந்தார். டெஸ்ட் போட்டியில் அவரது அதிகபட்ச ஸ்கோராகும். இதற்கு முன்பு 162 ரன் எடுத்ததே அவருக்கு அதிகபட்சமாக இருந்தது.

நியூசிலாந்து அணி 114 ஓவர்களில் 460 ரன் குவித்து ஆல் அவுட் ஆனது. வாக்னர் 42 பந்தில் 66 ரன் (8 பவுண்டரி, 4 சிக்சர் ) எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கேப்ரியல், அல்ஜாரி ஜோசப் தலா 3 விக்கெட்டும், செமர் ஹோல்டர், ரோஸ்டன் சேஸ் தலா 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் நியூசிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் திணறியது. 29 ரன்னுக்குள் 4 விக்கெட்டை இழந்தது.

பிராத்வெயிட் (0), டாரன் பிராவோ (7 ரன்) ஆகியோரை சவுத்தியும், கேம்பல் (14 ரன்), ரோஸ்டன் சேஸ் (0) ஆகியோரை ஜேமிசனும் அவுட் ஆக்கினார்கள்.

பிளாக்வுட் ஜோடி நிதானத்துடன் ஆடி அரை சதத்தை கடந்த அவர் 69 ரன்னில் ஆட்டம் இழந்தார். புரூக்ஸ் 14 ரன்னும் கேப்டன் ஹோல்டர் 9 ரன்களும் ஜோசப் 0 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.

இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 124 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்தனர்.

நியூசிலாந்து அணி தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை சவுத்தி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker