TAMIL

தனது பழைய புகைப்படத்தை வெளியிட்ட இந்திய வீரர் விராட் கோஹ்லி! கிண்டலடித்து பதிவிட்ட வேறு அணியை சேர்ந்த வீரர்

இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி வெளியிட்ட பழைய புகைப்படத்தை முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கிண்டலடித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கோஹ்லி தற்போது ஃபிட்டான விளையாட்டு வீரர்களில் ஒருவராக உள்ளார்.



அவர் தனது ஆரம்ப காலத்தில் பப்ளியாக இருந்தார். அப்போது ஃபிட்னஸில் பெரிதாக கவனம் செலுத்துவதில்லை என்றும், டயட்டிலும் பெரிய அளவு அக்கறை கொள்ளவில்லை என பல பேட்டிகளில் அவரே தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் கோஹ்லி தற்போது, 10 ஆண்டுக்கு முன் எடுத்த தனது பழைய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், மாற்றத்துக்கான வியாழக்கிழமை. எனது ரியாக்‌ஷனே எல்லாத்தையும் தெரிவித்துவிடும் என குறிப்பிட்டுள்ளார்.

அதைப் பார்த்த முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கோஹ்லியை மரண கலாய் கலாய்த்துள்ளார்.



பீட்டர்சனின் பதிலில், இடது பக்கத்தில் உள்ள பையனை எனக்கு நினைவிருக்கிறதே என குறிப்பிட்டுள்ளார்.

கோஹ்லியின் இந்த தடாலடி மாற்றத்தால் தான், இந்த 10 ஆண்டுகளில் விஸ்டன் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் ஒருவராக இடம் பிடிக்கும் அளவு அவரை உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker