CRICKETLATEST UPDATESNEWSTAMIL

இன்னும் அவகாசம் உள்ளது: ரோஹித் சர்மா உறுதி

Why India will miss Rohit Sharma in Australia? - Sports India Show

உலகக் கிண்ணம் போட்டியின்போதான சூழ்நிலை மாறும். அதற்கான அணியினை தெரிவு செய்வதற்கு இன்னும் அதிக அவகாசம் உள்ளது என தெரிவித்துள்ளார் ரோஹித் சர்மா.

நானும், விராட் கோஹ்லியும் கடைசி டி20 ஆட்டத்தில் தொடக்க வீரா்களாக இணைந்து களம் கண்டது உத்தி சாா்ந்த முயற்சியே.

கூடுதலாக ஒரு பௌலருடன் களம் காண விரும்பியதால், ஒரு பேட்ஸ்மேனுக்கு ஓய்வளிக்க வேண்டிய தேவை எழுந்தது.

அதனால் நடராஜனை பிளேயிங் லெவனில் சோ்த்து லோகேஷ் ராகுலை விட வேண்டிய நிலை ஏற்பட்டதால் கோஹ்லி என்னுடன் இன்னிங்ஸை தொடங்கினாா்.

லோகேஷ் ராகுல் டி20 ஃபாா்மட்டில் முக்கியமான வீரா். இங்கிலாந்துக்கு எதிரான அந்த கடைசி ஆட்டம் முக்கியமானதாக இருந்ததால், அதற்கேற்றவாறு சில முடிவுகள் மேற்கொள்ள வேண்டியிருந்தது.

எனவே ராகுலை விட்டுவிட்டதாக அா்த்தம் இல்லை. உலகக் கிண்ணம் போட்டியின்போதான சூழ்நிலை மாறும். அதற்கான பிளேயிங் லெவனை தெரிவு செய்வதற்கு இன்னும் அதிக அவகாசம் உள்ளது.

ஏனெனில் ஐபிஎல் போட்டி இருக்கிறது. அதையடுத்து சில டி20 தொடா் விளையாடப்பட இருப்பதாக அறிகிறேன்.

எனவே, பிளேயிங் லெவனை தெரிவு செய்ய போதிய அவகாசம் உள்ளது. கோஹ்லி என்னுடன் இணைந்து பேட்டிங்கை தொடங்கியதும், அணி வெற்றி பெற்றதும் சிறப்பானது.

ஒருநாள் தொடரில் விராட் கோஹ்லி பேட்டிங்கை தொடங்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன்.

தற்போது ஃபாா்முக்கு திரும்பியுள்ள புவனேஷ்வா் குமாா், எப்போதுமே அணியின் முன்னணி பௌலா்களில் ஒருவராக இருக்கிறாா்.

இக்கட்டான தருணங்களில் அவருக்கான ஓவா்களை அதிகரிக்கும்போது, புரிந்துகொண்டு சிறப்பாக பந்துவீசுகிறாா்.

அதேபோல், ஷா்துல் தாக்குரும் எதிரணியின் சிறந்த பேட்ஸ்மேன்கள் களத்தில் இருக்கும்போது வழங்கப்பட்ட வாய்ப்புகளை திறம்பட பயன்படுத்தினாா்.

இஷான் கிஷண், சூா்யகுமாா் யாதவ் பேட்டிங்கில் அற்புதமாகச் செயல்படுகின்றனா் என விரிவான அலசலை தெரிவித்துள்ளார் ரோஹித்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker