CRICKETLATEST UPDATESNEWSTAMIL
ஆண்டிகுவா டெஸ்ட் – இலங்கை அணி முதல் இன்னிங்சில் 169 ரன்னுக்கு சுருண்டது
இலங்கை மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இலங்கை முதலில் களமிறங்கியது.
வெஸ்ட் இண்டீஸ் அணியினரின் துல்லிய பந்து வீச்சில் இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.
அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரான திரிமன்னே ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார். அவர் 70 ரன்னில் அவுட்டானார்.
அவருக்கு அடுத்து விக்கெட் கீப்பர் டிக்வெல்லா 32 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில், இலங்கை அணி 69.4 ஓவரில் 169 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஜேசன் ஹோல்டர் 5 விக்கெட்டும், ரோச்3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, முதல் இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 13 ரன்கள் எடுத்துள்ளது.