TAMIL

அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக பிரக்யான் ஓஜா அறிவிப்பு

இந்திய கிரிக்கெட் அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஓஜா, அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் உடனடியாக ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

33-வயதான பிரக்யான் ஓஜா 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 113 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.



18 -ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஓஜா 21 விக்கெட்டுகளையும், 6-இருபது ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

பிரக்யான் ஓஜா கடைசியாக கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார்.

அதன்பின் இந்திய அணியில் விளையாடவில்லை.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker