TAMIL
ரூ.1 லட்சம் நலநிதி விவகாரம்: டோனியின் மனைவி கண்டனம்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி, கொரோனாவால் பாதிக்கப்பட்ட தினக்கூலி தொழிலாளர்களின் குடும்பத்துக்கு உதவ புனேயை சேர்ந்த ஒரு அறக்கட்டளைக்கு ஆன்லைன் மூலமாக ரூ.1 லட்சம் நன்கொடையாக வழங்கியதாக செய்திகள் வெளியாயின.
இதற்கு பல ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்து இருந்தனர். பல கோடிகளுக்கு சொந்தக்காரரான டோனி வெறும் ரூ.1 லட்சம் தான் நன்கொடை அளித்தாரா? என்று சிலர் சமூக வலைதளங்கள் மூலமாக விமர்சனங்களையும் முன்வைத்தனர்.
இந்த நிலையில் டோனி நிதி வழங்கியதாக வெளியான செய்தி தவறானது என்று அவருடைய மனைவி சாக்ஷி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நேற்று அவர் தனது டுவிட்டர் பதிவில், ‘இத்தகைய நெருக்கடியான தருணத்தில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று அனைத்து மீடியாக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.
இதற்காக நீங்கள் வெட்கப்பட வேண்டும்.
பொறுப்பான ஜெர்னலிசம் எங்கே போனது என்று தெரியவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.