CRICKETLATEST UPDATESNEWSTAMIL

முதல் போட்டியிலேயே பதற்றமின்றி அபாரமாக பந்து வீசினார்: டி நடராஜனுக்கு ரோகித் சர்மா பாராட்டு

ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் உடன் இணைந்து இருவரும் அபாரமாக பந்து வீசினார்கள். டி நடராஜன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

முக்கியமான கட்டத்தில் மேத்யூ வடே, லாபஸ்சேன் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். கடைசி விக்கெட்டாக ஹசில்வுட்டை க்ளீன் போல்டாக்கினார்.

இந்த நிலையில் துணைக் கேப்டனான ரோகித் சர்மா டி நடராஜனை வெகுவாக பாராட்டியுள்ளார். டி நடராஜன் குறித்து ரோகித் சர்மா கூறுகையில் ‘‘உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நடராஜன் மிகவும் சிறப்பாக பந்து வீசினார். சர்வதேச கிரிக்கெட்டில் நாட்டிற்கு வெளியே முதல் முறையாக தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பந்து வீசுவது எளிதான காரியம் அல்லை. ஆனால் டி நடராஜன் எந்தவித நெருக்கடிக்கு ஆளாகவில்லை.

முதல் பந்தில் இருந்து வீறுகொண்டு எழுந்துகொண்டே இருந்தார். அதிகமான பொறுமையுடன் வலுவாக தன்மையை வெளிப்படுத்தினார். அதிகமாக பேசுவது கிடையாது. ஆனால், அவர் திடமான தனித்தன்மை வாய்ந்தவர். அவர் அணிக்காகவும் தனக்காகவும் சிறப்பாக செயல்பட விரும்புகிறார். இங்கே அதை செய்து கொண்டிருக்கிறார்.

ஏராளமான வீரர்கள் ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக விளையாடுகிறார்கள். சிராஜ் இரண்டு போட்டிகளில் விளையாடியுள்ளார். நவ்தீப் சைனி ஒரு போட்டியில் விளையாடியுள்ளார். உண்மையிலேயே அனுபவம் இல்லை.

அதிக அளவில் தங்களுடைய துல்லியத்தை வெளிப்படுத்தினார்கள். ஒட்டுமொத்தமாக நான் பத்து வீச்சாளர்களின் பெர்பார்மன்ஸை ஆராய்ந்து பார்த்ததில், பந்து விச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள் என்றே சொல்வேன். ஆடுகளம் இன்னும் சிறந்ததாகவே இருக்கிறது. அவர்களுடைய பந்து வீச்சு சிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சிறந்த அனுபவம். அவர்களை பரிசோதனை செய்து கொள்வதற்கானது’’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker