TAMIL
ரவிசந்திரன் அஸ்வின் உட்பட மூன்று வெளிநாட்டு வீரர்கள் நீக்கம் – யார்க்ஷைர் அணி
ஜூலை 1 வரை தொழில்முறை கிரிக்கெட் ஆட்டங்களுக்குத் தடை விதித்துள்ளதால் இங்கிலாந்தில் நடைபெறுவதாக இருந்த இங்கிலாந்து – மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான டெஸ்ட் தொடர், இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்கள் ஆகியவை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கவுண்டி சாம்பியன்ஷிப் போட்டி 2020, ஏப்ரல் 12 முதல் ஆரம்பமாக இருந்தது. ஆனால் கரோனா அச்சுறுத்தல் காரணமாகத் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அஸ்வின், கேஷவ் மஹாராஜ், நிகோலஸ் பூரான் ஆகிய மூன்று வெளிநாட்டு வீரர்களின் இந்த ஆண்டுக்கான ஒப்பந்தத்தை ரத்து செய்துள்ளது யார்க்ஷைர் கவுண்டி அணி.
கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, பரஸ்பர ஒப்புதலால் 2020 பிரச்சாரத்திற்கான வெளிநாட்டு வீரர் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக ஆங்கில கவுண்டி அறிவித்தது.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் ரவிச்சந்திரன் அஸ்வின் இந்த சீசனின் யார்க்ஷைர் அணிக்காக விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கொரோனா பரவி வரும் காலத்தில், வீரர்கள் மற்றும் அவர்களின் ஏஜெண்ட்டுகளுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பு கொண்டுள்ளோம்
என்று இங்கிலாந்து நாட்டின் கிரிக்கெட் இயக்குனர் மார்ட்டின் மோக்சன் கூறினார்.