CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பிரிஸ்பேன் டெஸ்ட்: லாபஸ்சேன் சதத்தால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 274/5

ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங் தேர்வு செய்தது. இந்திய அணியில் டி நடராஜன், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். மயங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.
 
வார்னர், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரின் கடைசி பந்திலேயே முகமது சிரஜ் வார்னரை சாய்த்தார். 1 ரன்னில் ரோகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து வார்னர் ஏமாற்றம் அடைந்தார்.
 
மற்றொரு தொடக்க வீரரான மார்கஸ் ஹாரிஸ் 5 ரன் எடுத்த நிலையில் ஷர்துல் தாகூர் பந்தில் ஆட்டமிழந்தார். 3-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் ஸ்டீவ் ஸ்மித் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது.
 
ஸ்டீவ் 36 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு லாபஸ்சேன் உடன் மேத்யூ வடே ஜோடி சேர்ந்தார். லாபஸ்சேன் 37 ரன்கள் எடுத்த நிலையில் நவ்தீப் சைனி பந்தில் ராஹேனியுடம் கேட்ச் வாய்ப்பை கொடுத்தார். ரஹானே அந்த வாய்பை தவறவிட்டார்.
 
அதனால் அரைசதம் அடித்த லாபஸ்சேன், அரை சதமாக மாற்றினார். மறுமுனையில் மேத்யூ வடே 45 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். சதம் அடித்த லாபஸ்சேன் 108 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி டி நடராஜன் அசத்தினார். இந்த ஜோடி 113 ரன்கள் விளாசியது ஆஸ்திரேலியாவுக்கு பூஸ்டாக அமைந்தது.
 
லாபஸ்சேன் ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 65.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் எடுத்திருந்தது.
 
6-வது விக்கெட்டுக்கு டிம் பெய்ன் உடன் கேமரூன் க்ரீன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி இன்றைய முதல்நாள் ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தது. இதனால் ஆஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் அடித்துள்ளது. கேமரூன் க்ரீன் 28 ரன்களுடனும், டிம் பெய்ன் 38 ரன்களுடனும்  களத்தில் உள்ளனர்.
 
இந்திய  அணி தரப்பில் டி நடராஜன் அதிகபட்சமாக 2 விக்கெட் வீழ்த்தினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker