ஐபிஎல் 2021 சீசனில் இதுவரை ஐந்து போட்டிகள் நடைபெற்றுள்ளன. ஐந்து போட்டிகள் முடிவில் பேட்டிங்கில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் 259 ரன்கள் விளாசி ஆரஞ்ச் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். இரண்டு முறை அரைசதம் விளாசியுள்ளார். அதிகபட்ச ஸ்கோர் 92 ஆகும்.
பஞ்சாப் கிங்ஸ் கேப்டனும், தொடக்க பேட்ஸ்மேனுமான கேஎல் ராகுல் ஐந்து போட்டிகளில் 221 ரன்கள் அடித்து 2-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக 91 ரன்கள் அடித்துள்ளார். இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டு பிளிஸ்சிஸ் ஐந்து போட்டிகளில் 214 ரன்கள் அடித்து 3-வது இடத்தில் உள்ளார். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 95 ரன்கள் அடித்துள்ளார். 3 அரைசதம் விளாசியுள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் பேர்ஸ்டோ ஐந்து போட்டிகளில் 211 ரன்கள் அடித்து 4-வது இடத்தில் உள்ளார். இவரும் இரண்டு அரைசதம் அடித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் தொடக்க வீரர் ரோகித் சர்மா 201 ரன்களுடன் 5-வது இடத்திலும், ஆர்சிபியின் மேக்ஸ்வெல் 198 ரன்களுடனும் 6-வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் 187 ரன்களுடன் 7-வது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிதிஷ் ராணா 186 ரன்களுடன் 8-வது இடத்திலும், தேவ்தத் படிக்கல் 171 ரன்களுடன் 9-வது இடத்திலும், பிரித்வி ஷா 166 ரன்களுடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.
பந்து வீச்சில் ஆர்சிபி வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 போட்டிகளில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி பர்பிள் தொப்பியை தன்வசம் வைத்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் அவேஷ் கான் 11 விக்கெட்டுடன் 2-வது இடத்திலும், ராகுல் சாஹல், கிறிஸ் மோரிஸ் தலா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி முறையே 3-வது மற்றும் 4-வது இடங்களை பிடித்துள்ளனர்.
தீபக் சாஹர் 8 விக்கெட்டுடன் 5-வது இடத்திலும், சேத்தன் சகாரியா 7 விக்கெட்டுடன் 6-வது இடத்திலும், அந்த்ரே ரஸல் 7 விக்கெட்டுடன் 7-வது இடத்திலும் ரஷித் கான், அர்ஷ்தீப் சிங், டிரென்ட் போல்ட் ஆகியோர் தலா 6 விக்கெட்டுடன் 8 முதல் 10 வரையிலான இடங்களை பிடித்துள்ளனர்.