Central College JAFLKCRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சீருடை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு புதிய சீருடை || Tamil News Chennai Super  Kings unveils new jersey for IPL

வருகிற 9-ந்தேதி தொடங்கும் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு தயாராகி வரும் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை புதிய சீருடையுடன் களம் இறங்குகிறது. 2008-ம் ஆண்டில் இருந்து ஒரே மாதிரியான சீருடையுடன் வலம் வந்த சென்னை அணி முதல் முறையாக அதன் வடிவமைப்பில் மாற்றம் செய்துள்ளது. தேசத்தை பாதுகாக்கும் ராணுவ படையினரை கவுரவிக்கும் வகையில் ராணுவ சீருடைக்குரிய நிறம், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சீருடையின் தோள்பட்டை பகுதியில் இடம் பெற்றுள்ளது.

 

இது குறித்து சென்னை அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘ராணுவத்தின் முக்கியத்துவத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாகவும், அது குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்தும் நோக்கிலும் எங்கள் அணியின் சீருடையில் ராணுவ சீருடையின் வண்ணத்தை இணைத்துள்ளோம். ராணுவ வீரர்கள் தான் நாட்டின் உண்மையான ஹீரோக்கள்’ என்றார்.

MS Dhoni-led CSK unveils new, camouflage IPL jersey | சென்னை சூப்பர் கிங்ஸ்  (CSK) அணிக்கு புதிய சீருடை- In Pics! | News in Tamil

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker