TAMIL
கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் கிண்டலாக செய்கை செய்த மேற்கிந்திய தீவு வீரர்! வைரலாகும் வீடியோ
இந்திய அணிக்கெதிரான இரண்டாவது டி20 போட்டியில் கோஹ்லியின் விக்கெட்டை வீழ்த்தியவுடன் கிண்டல் செய்யும் விதமாக மேற்கிந்திய தீவு வீரர் யாரும் சத்தம் போடக் கூடாது என்பது போல் செய்கை செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான இரண்டாவது டி20 போட்டி நேற்று கேரளா திருவனந்தபுரத்தில் நடைபெற்றது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 170 ஓட்டங்கள் குவிக்க, அதன் பின் ஆடிய மேற்கிந்திய தீவு அணி 18.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் இந்திய அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த போது, 13.1 பந்தை மேற்கிந்திய தீவு அணியின் வேகப்பந்து
வீச்சாளரான கேஸ்ரிக் வில்லியம்ஸ் வீச, அதை கோஹ்லி எதிர்கொண்ட போது, ஆப் திசையில் சிம்மன்ஸிடம் கேட்ச் ஆனது.
அப்போது வில்லியம்ஸ் இதை கொண்டாட வேண்டாம், அமைதியாக இருங்கள் என்ற படி வாயிலில் விரலை வைக்கும் படி செய்கை காட்டினார்.
இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதற்கு பழி தீர்க்கும் வகையில் கோஹ்லி முதல் போட்டியில் அவரின் ஓவரில் சிக்ஸர், பவுண்டரி விளாசிய பின்பு அதே நோட் புக் ஸ்டைலில் கொண்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.