TAMIL
ஆஸ்திரேலியாவில் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்தியா விளையாடும்; பி.சி.சி.ஐ. அறிவிப்பு
ஆஸ்திரேலியாவில் இந்திய கிரிக்கெட் அணி இந்த வருடம் சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய கிரிக்கெட் அணியானது பகலிரவு டெஸ்ட் போட்டி ஒன்றில் விளையாடும் என பி.சி.சி.ஐ. வட்டாரம் தெரிவித்து உள்ளது.
கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த ஒரு நாள் போட்டி தொடரின்பொழுது பேசிய கோலி, பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் விளையாட நாங்கள் தயாராக இருக்கிறோம்.
அது காபா அல்லது பெர்த் என எந்த நகராக இருப்பினும்… அது எங்களுக்கு ஒரு பொருட்டல்ல.
நாங்கள் சவாலை சந்திக்க தயாராகவே இருக்கிறோம் என கூறினார்.
கடந்த 2018-19ம் ஆண்டில் அடிலெய்டு நகரில் பகலிரவு போட்டி ஒன்றை நடத்த ஆஸ்திரேலியா முன்வந்தபொழுது, அனுபவ பற்றாக்குறையை சுட்டி காட்டி இந்தியா அதனை மறுத்தது.
இதன்பின் கடந்த நவம்பரில் ஈடன் கார்டனில் வங்காளதேச அணிக்கு எதிராக தனது முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது.