TAMIL

அக்தரின் ‘பவுன்சர்’ பந்தை சந்திக்க தெண்டுல்கர் பயந்தார்: முகமது ஆசிப்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஆசிப் நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது கூறியதாவது:-

2006-ம் ஆண்டு இந்திய அணி பாகிஸ்தானுக்கு வந்து விளையாடியது.

கராச்சியில் நடந்த 3-வது மற்றும் கடைசி டெஸ்டில் நாங்கள் பந்து வீச்சை தொடங்கிய போது, சோயிப் அக்தர் ‘எக்ஸ்பிரஸ்’ வேகத்தில் போட்டார்.

இந்திய வீரர் சச்சின் தெண்டுல்கர், அக்தர் வீசிய ஓரிரு ‘பவுன்சர்’ பந்துகளை எதிர்கொண்ட போது கண்களை(பயத்தில்) மூடிக்கொண்டார். இதை ‘ஸ்கொயர் லெக்’ திசையில் நடுவர் அருகில் நின்ற நான் கவனித்தேன்.

அந்த டெஸ்டில் இந்திய பேட்ஸ்மேன்கள் பெரும்பாலும் காலை பின்பக்கமாக நகர்த்தி (பேக்புட்) விளையாடினார்.

அவர்களை முதல் இன்னிங்சில் 240 ரன்களை கூட தொடவிடாமல் கட்டுப்படுத்தினோம்.

அதன் மூலம் நாங்கள் சரிவில் இருந்து மீண்டு வெற்றி பெற்றோம்” என்று ஆசிப் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker