CRICKETLATEST UPDATESNEWSTAMIL

அயர்லாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியிலும் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

ஆப்கானிஸ்தான் – அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி அபு தாபியில் நேற்று நடைபெற்றது.

முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் 9 விக்கெட் இழப்பிற்கு 266 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் அஷ்கர் ஆஃப்கன் 41 ரன்களும், ரஷித் கான் 48 ரன்களும் விளாசினர்.

பின்னர் 267 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் பால் ஸ்டிர்லிங் சிறப்பாக விளையாடி 118 ரன்கள் விளாசினார். என்றாலும் மற்ற பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க அயர்லாந்து 47.1 ஓவரில் 230 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் ஆப்கானிஸ்தான் 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ரஷித் கான் 4 விக்கெட் வீழ்த்தினார். 48 ரன்களும், 4 விக்கெட்டும் வீழ்த்திய ரஷித் கான் ஆட்ட நாயகன் விருது பெற்றார். பால் ஸ்டிர்லிங் தொடர் நாயகன் விருதை வென்றார்.

ஏற்கனவே முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருந்ததால், இந்த வெற்றியின் மூலம் தொடரை 3-0 என ஆப்கானிஸ்தான் வென்றது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker