TAMIL
360 டிகிரி டிவில்லியர்ஸை கண்டு முன் கொண்டு வந்த இந்திய வீரர்… அற்புதமாக சிக்ஸர் பறக்கவிட்ட வீடியோ
தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான டிவில்லியர்ஸ் போன்று இந்திய வீரர் கே.எல்.ராகுல் அபாரமாக சிக்ஸர் அடித்த வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் பாராட்டை பெற்று வருகிறது.
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, அங்கு முதலில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர்களில் விளையாடியது, இந்த தொடரை இந்திய அணி 5-0 என்று வொயிட் வாஷ் செய்தது.
இதையடுத்து இரு அணிகளுக்கிடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று துவங்கியது.
இதில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர் முடிவில் 347 ஓட்டங்கள் குவித்தது.
அதன் பின் நியூசிலாந்து அணி ஆடி வருகிறது.
இந்நிலையில் இப்போட்டியில் இந்திய அணி வீரரான கே.எல்.ராகுல் 64 பந்துகளில் 88 ஓட்டங்கள் குவித்தார்.
குறிப்பாக ஆட்டத்தின் 49-வது ஓவரின் இறுதி பந்தை எதிர்கொண்ட ராகுல், தென் ஆப்பிரிக்கா வீரர் டிவில்லியர்ஸ் போன்றே அற்புதமாக சிக்ஸர் அடித்து மிரட்டினார்.
அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக, இதைக் கண்ட இணையவாசிகள் அப்படியே டிவில்லியர்ஸ் ஷாட் போன்றே இருப்பதாக குறிப்பிட்டு வருகின்றனர்.