TAMIL
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக சோதி நியமனம்
இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சு ஆலோசகராக நியூசிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் சோதி நியமிக்கப்பட்டுள்ளார்.
27 வயதான சோதி கடந்த 2 ஆண்டுகளாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் வீரராக இடம் பெற்று இருந்தார். அவர் 8 ஆட்டங்களில் விளையாடி 9 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
கடந்த மாதம் நடந்த வீரர்கள் ஏலத்திற்கு முன்பு அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.
நியமனம் குறித்து சோதி கருத்து தெரிவிக்கையில், ‘ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினருடன் எனக்கு நல்ல புரிந்துணர்வு உள்ளது. எனவே எனக்கு வந்த இந்த வாய்ப்பை மறுசிந்தனை எதுவும் செய்யாமல் ஏற்றுக்கொண்டேன்.
இந்த பணியை மேற்கொள்ள ஆவலாக இருக்கிறேன்’ என்றார்.