TAMIL
‘பும்ரா ஒரு குழந்தை பவுலர்’ – பாகிஸ்தான் முன்னாள் வீரர் கிண்டல்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் 40 வயதான அப்துல் ரசாக் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
கிளைன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மிகச்சிறந்த பவுலர்களுக்கு எதிராக நான் விளையாடி இருக்கிறேன். என்னை பொறுத்தவரை இந்தியாவின் ஜஸ்பிரித் பும்ரா ஒரு குழந்தை (பேபி) பவுலர். இப்போது விளையாடி இருந்தால் அவரது பந்து வீச்சுக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி, அடித்து நொறுக்கியிருக்க முடியும். நான் விளையாடிய காலத்தில் உலகத்தரம் வாய்ந்த பந்து வீச்சாளர்களை எதிர்கொண்ட எனக்கு, பும்ரா போன்ற பவுலர்களை எதிர்கொள்வதில் பிரச்சினை இருந்திருக்காது. அவருக்கு தான் நெருக்கடி இருந்திருக்கும். ஆனாலும் அவர் நன்றாக செயல்படுகிறார். வெகுவாக முன்னேற்றம் கண்டு இருக்கிறார். அவரது வித்தியாசமான ஆக்ஷனும், துல்லியமான தாக்குதலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அப்துல் ரசாக் கூறினார்.