IPL TAMILTAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட்: 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி

சார்ஜாவில் ஐபிஎல் கிரிக்கெட்டின் 17-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதன்படி மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக டி காக் 67 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக சந்தீப் சர்மா மற்றும் சித்தார்த் கவுல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், ரஷித் கான் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 209 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணியில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் பாரிஸ்டோ ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர்.

அந்த ஜோடியில் பாரிஸ்டோ 25(15) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே 30(19) ரன்களும், கேன் வில்லியம்சன் 3 (5) ரன்னும், கார்க் 8 (7) ரன்னும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

சிறப்பான ஆட்டத்தினை வெளிப்படுத்தி அரைசதம் பதிவு செய்த கேப்டன் டேவிட் வார்னர் 60(44) ரன்களில் வெளியேறினார்.

அவரைத்தொடர்ந்து களமிறங்கிய அப்துல் சமத் 20(9) ரன்களும், அபிஷேக் சர்மா 10(13) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதியில் ரஷித்கான் 3(6) ரன்னும், சந்தீப் சர்மா ரன் ஏதும் எடுக்காமலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இறுதியில் ஹைதராபாத் அணி 20 ஒவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து, 174 ரன்கள் எடுத்தது.

இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 34 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றிபெற்றது.

ஹைதராபாத் அணியின் சார்பில் அதிகபட்சமாக டேவிட் வார்னர் 60 ரன்கள் எடுத்தார்.

மும்பை அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா, போல்ட் மற்றும் பேட்டின்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், குர்ணால் பாண்ட்யா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker