ஐபிஎல் தொடரில் ஆறு ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய பியூஷ் சாவ்லா, வரவிருக்கும் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடவுள்ளார்.
சூப்பர் கிங்ஸ் வியாழக்கிழமை நடந்த ஏலத்தில் 6.75 கோடி ரூபாய் செலவழித்து மூத்த சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லாவை வாங்கியது.
சமீபத்திய நடந்த ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த இந்திய வீரர் ஆனார் சாவ்லா.
சாவ்லா சென்னை அணியுடன் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கப் போகும் நிலையில், அவர் தனது புதிய அணியை ஐபிஎல்-ல் சிறந்தது என்று கூறியுள்ளதால் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரசிகர்களின் கோபத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் லீக்கில் டோனி சிறந்த அணித்தலைவர் என்று கூறி, கம்பீர் மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரையும் அசிங்கப்படுத்தியுள்ளார் சாவ்லா.
ஏலத்திற்கு பின் சாவ்லா அளித் பேட்டியில், சிஎஸ்கே-ஐ விட சிறந்த அணியும், டோனியை விட சிறந்த அணித்தலைவரும் இருக்க முடியாது.
ஒரு வீரராக, நீங்கள் எப்போதும் ஒரு நல்ல அணியுடன் இருக்க விரும்புகிறீர்கள், ஒரு நல்ல தலைவரின் கீழ் விளையாட வேண்டும், மேலும் சென்னை அணியை விட சிறந்த அணியையும் டோனியை விட சிறந்த தலைவரையும் கொண்டிருக்க முடியாது.
இதற்கு மேல் எனக்கு ஏதுவும் வேண்டாம் என்று சாவ்லா கூறியுள்ளார்.