IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
4 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி ஒரு மோசமான சாதனையா….
ஐ.பி.எல். 2020 சீசன் நேற்று தொடங்கியது. அபு தாபியில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
இந்தத் தோல்வி மூலம் மும்பை இந்தியன்ஸ் அணியின் மோசமான சாதனை தொடர்ந்து கொண்டு வருகிறது. மும்பை இந்தியன்ஸ் தொடரை சிறப்பான வகையில் தொடங்கியது கிடையாது. முதலில் தோல்வியடைந்து வாழ்வா? சாவா? என்ற நிலைக்கு வந்து அதன்பின் விஸ்வரூம் பெறும்.
அந்த அணி கடந்த 2013-ல் இருந்து தொடக்க போட்டியை வென்றது கிடையாது. நேற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் தோல்வியடைந்ததால், தொடர்ச்சியாக 8 சீசன்களில் முதல் ஆட்டத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.
சிஎஸ்கே, கேகேஆர், ஆர்பிஎஸ் அணிகளிடம் தலா இரண்டு முறையும் ஆர்சிபி மற்றும் டெல்லி அணிகளிடம் தலா ஒருமுறையும் தோல்வியடைந்துள்ளன.
மேலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற போட்டிகளில் இதுவரை வெற்றி கண்டதில்லை. இதற்கு முன் ஐந்து போட்டிகளிலும் தோல்வியடைந்தன. நேற்றைய போட்டியின் மூலம் 6-வது முறையாக தோல்வியடைந்துள்ளது.