TAMIL

3வது 20 ஓவர் போட்டி: நியூசிலாந்து அணிக்கு 180 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியா

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகிறது.

முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி தொடரில் 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் போட்டி ஹாமில்டன் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.



இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – கே.எல். ராகுல் களமிறங்கினர்.

முதல் 2 போட்டிகளில் சோபிக்காத ரோகித் சர்மா இன்றைய போட்டியில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

ராகுல் 27 ரன்களில் ஆட்டமிழந்தார்.

மறுமுனையில் அதிரடியாக விளையாடி ரோகித் அரைசதம் கடந்து 65 ரன்களில் ஆட்டமிழந்தார்.

* மூன்று வித கிரிக்கெட்டுகளில் தொடக்க வீரராக களம் இறங்கும் ரோகித் சர்மா 65 ரன்கள் எடுத்து 10 ஆயிரம் ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார்.

* சர்வதேச அளவில் அதிவேகமாக இந்த மைல்கல்லை எட்டிய வீரர்களில் ரோகித் சர்மாவுக்கு 2-வது இடம் (219 இன்னிங்ஸ்) கிடைத்து உள்ளது. முதலிடத்தில் சச்சின் (214 இன்னிங்ஸ்) உள்ளார்.

இந்திய அணியில் 3-வது வீரராக களமிறங்கும் விராட் கோலி, இந்த முறை மாற்றத்திற்காக ஷிவம் துபேவை களமிறக்கினார்.



ஆனால் அதிரடியாக விளையாடி ரன் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷிவம் துபே 3 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அடுத்து வந்த ஷிரேயாஸ் ஐயர் 17 ரன்களிலும், கேப்டன் விராட் கோலி 38 ரன்களிலும் அவுட்டாகினர்.

இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு179 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து அணி சார்பில் ஹமிஷ் பென்னட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker