IPL TAMILLATEST UPDATESNEWSTAMIL

மீண்டும் ஒருமுறை அதிர்ச்சி கொடுக்குமா சிஎஸ்கே: நாளை மும்பை இந்தின்ஸ் அணியுடன் மோதல்

ஐபிஎல் தொடரின் 41-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

சென்னனை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் 3-ல் மட்டுமே வெற்றி பெற்று பாயின்ட் டேபிளில் கடைசி இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 9 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று 3-வது இடத்தில் உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கான வாய்ப்பை ஏறக்குறைய 99.99 சதவீதம் இழந்து விட்டது. இதனால் வரும் போட்டிகளில் இளைஞர்களுக்கு வாய்ப்பு கொடுக்குமா? எந்தெந்த அணியின் பிளேஆஃப்ஸ் சுற்று வாய்ப்புக்கு தடையாக இருக்கும் என்பதைதான் பார்க்க வேண்டும்.

முதல் ஏழு போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்றிருந்தபோது சிஎஸ்கே கப்பலில் ஓட்டைகள் உள்ளன. ஒன்றை அடைத்தால் மற்றொன்று உருவாகிறது என வேதனையுடன் கூறினார். ஓட்டைகள் உள்ள கப்பல் கரை சேருமா?. அதேபோல் சென்னை அணியால் ஓட்டைகளை அடைத்து கப்பலை கரை சேர்க்க முடியாமல் போய்விட்டது.

பந்து வீச்சு சரியாக இருந்தால் பீல்டிங் சரியில்லை. பேட்டிங் சரியில்லை. பேட்டிங் நன்றாக இருந்தால் பந்து வீச்சு சரியில்லை என்ற நிலைக்கு சிஎஸ்கே தள்ளப்பட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிரான ஏற்கனவே வெற்றி பெற்றிருப்பதால் அந்த உத்வேகத்துடன் வேண்டுமென்றால் விளையாடலாம்.

கடைசியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்து 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. ஐந்து விக்கெட் மட்டுமே இழந்து இந்த ரன்னை எடுத்ததால் பேட்டிங்கை என்ன சொல்வது.

பேட்டிங்கை மெருகேற்றாத வரை மற்றவற்றை பற்றி பேச ஏதுமில்லை. கடைசி போட்டியில் ராஜஸ்தானுக்கு எதிரான தோல்விக்குப்பின் இளைஞர்களிடம் Spark இல்லை. அதனால் அனுபவ வீரர்களுடன் விளையாடுகிறேன் என டோனி விளக்கம் அளித்தார். இதுவரை Spark ஆகாத மூத்த வீரர்கள் டோனியின் இந்த வார்த்தையால் வீறுகொண்டு எழுவார்களா? எனப் பார்க்க வேண்டும்.

மும்பை இந்தியன்ஸ் ஐந்து போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்ற பிறகு சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணியிடம் வீழ்ந்தது.

சிஎஸ்கே-யிடம் முதல் போட்டியில் பெற்ற தோல்விக்கு பழிதீர்க்கும் வகையில் விளையாடி வெற்றியுடன் பாயின்ட் டேபிளில் முதல் இடத்தை பிடிக்க விரும்பும்.

குயின்டன் டி காக் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடுவது அந்த அணிக்கு சிறந்த பலமாக கருதப்படுகிறது. மற்ற பேட்ஸ்மேன்களில் ஒருவர் சொதப்பினாலும் மற்றொருவர் அணியை இழுத்துச் செல்ல ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, பொல்லார்ட் என பேட்டிங் பட்டாளமே உள்ளது. எப்படியும் 160 ரன்களை தாண்டி விடும்.

பந்து வீச்சில் அந்த அணிக்கு பும்ரா, ராகுல் சாஹர் மிகப்பெரிய பலம். பும்ராவுக்கு இணையாக டிரென்ட் போல்ட் பந்து வீசி வருவது அந்த அணிக்கு மிகப்பெரிய பலமாக கருதப்படுகிறது.

ஒட்டு மொத்தத்தில் சென்னை அணியின் பேட்டிங்கே போட்டியின் வெற்றித் தோல்வியை தீர்மானிக்கும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker