TAMIL
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடர் : காயம் காரணமாக இந்திய வீரர் தீபக் சகார் விலகல்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், தொடரை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி வரும் 22-ம் தேதி கட்டாக்கில் நடக்கிறது.
இந்த நிலையில், 3-வது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் தீபர் சஹாக் காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவருக்கு பதிலாக நவ்தீப் சைனி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். முதுகின் அடிப்பகுதியில் ஏற்பட்ட வலி காரணமாக தீபக் சஹார் விலகியுள்ளார்.