TAMIL

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி – இந்திய அணி பேட்டிங்

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

ஐதராபாத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதையடுத்து இந்திய அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.



இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker