TAMIL

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 3வது ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
விளையாடி வருகிறது.

இதில் சென்னையில் நடந்த முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட்இண்டீஸ் 8 விக்கெட் வித்தியாசத்திலும், விசாகப்பட்டினத்தில் நடந்த 2-வது
ஆட்டத்தில் இந்தியா 107 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன.

இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.



இந்த நிலையில் இவ்விரு அணிகளில் கோப்பை யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி ஒடிசா
மாநிலம் கட்டாக்கில் உள்ள பராபதி ஸ்டேடியத்தில் இன்று நடக்கிறது.

இந்த ஆண்டில் இந்திய அணி விளையாடப்போகும் கடைசி சர்வதேச போட்டி இதுவாகும்.

இந்த போட்டியில், முதுகுவலி காரணமாக வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.

அவருக்கு பதிலாக 27 வயதான நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டுள்ளார்.

அவர் அறிமுக வீரராக களம் இறங்குகிறார்.



அவருக்கு ஒரு நாள் போட்டியில் விளையாடுவதற்கான தொப்பியை விராட் கோலி வழங்கினார்.

சைனியை கட்டி தழுவி மயங்க் அகர்வால் அணிக்கு வரவேற்றார்.

ரஞ்சி கோப்பையில் ஆந்திர அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி சைனி சாதனை படைத்துள்ளார்.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker