CRICKETLATEST UPDATESNEWSTAMIL
விராட் கோலி பயிற்சி வீடியோவிற்கு சூர்யகுமார் யாதவின் ரியாக்ட்
மும்பையைச் சேர்ந்த சூர்யகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த சில தொடர்களில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். உள்ளூர் தொடர்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். என்றாலும் 30 வயதாக அவருக்கு இதுவரை இந்திய தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
சமீபத்தில் முடைவடைந்த ஐபிஎல் 13-வது சீசனில் அதிரடி ஆட்டம் மூலம் ரன்கள் குவித்த போதிலும், அணியில் இடம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தார். இந்திய அணி அறிவித்த பின்னர் ஆர்சிபி- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.
சூர்யகுமார் யாதவ் பேட்டிங் செய்தபோது விராட் கோலி அவரை சீண்ட விரும்பினார். ஆனால் சூர்யகுமார் யாதவ் அவருக்கு பதில் அளிக்காமல் முகத்தை திருப்பிக்கொண்டு அமைதியாக சென்றுவிட்டார். சூர்யகுமார் யாதவின் அமைதியில் ஏராளமான அர்த்தங்கள் புதைந்து இருந்தன.
ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. விராட் கோலி பயிற்சி மேற்கொண்ட வீடியோவை வெளியிட்டு, ‘‘லவ் டெஸ்ட் கிரிக்கெட் பயிற்சி செசன்’’ என்று பதிவிட்டிருந்தார்.
அதற்கு சூர்யகுமார் யாதவ் ‘‘எனர்ஜி, சவுண்ட், விராட் கோலியின் ஆதிக்கத்தை பார்க்க காத்திருக்க முடியாது… #theBrand’’ எனப் பதிவிட்டுள்ளார்.
விராட் கோலியின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளேன் என சூர்யகுமார் யாதவ் தெரிவித்ததிலும் ஆயிரம் அர்த்தங்கள் புதைந்துள்ளன.