CRICKETLATEST UPDATESTAMIL
லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஒத்திவைப்பு
இதன்படி, நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் T 20 தொடரானது நவம்பர் மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் மற்றும் வெளிநாட்டு வீரர்களின் பங்குபற்றலுடன் நடைபெறவுள்ள அங்குரார்ப்பண லங்கா ப்ரீமியர் லீக் T20 கிரிக்கெட் தொடரின் வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதி இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.
எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி முதல் டிசம்பர் 6ஆம் திகதி வரை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள லங்கா ப்ரீமியர் லீக தொடரில் ஐந்து அணிகள் களமிறங்கவுள்ள நிலையில், காலி அணியை பாகிஸ்தானின் குவாட்டா கிளேட்டியேட்டர்ஸ் அணி வாங்கியது.
இந்த நிலையில், எஞ்சிய நான்கு அணிகளில் கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய அணிகளும் விற்பனை செய்யப்பட்டு விட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மறுபுறத்தில் உலகின் முன்னணி நட்சத்திர வீரர்களான கிறிஸ் கெய்ல், சஹீட் அப்ரிடி, டெரன் சமி, சகிப் அல் ஹசன், ரவி பொபாரா, கொலின் மன்ரோ உள்ளிட்ட சுமார் 150 வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக் தொடரில் விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும், இலங்கையில் அரசாங்கத்தினால் பின்பற்றப்படுகின்ற 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தல் விதிமுறை காரணமாக முன்னணி வெளிநாட்டு வீரர்கள் லங்கா ப்ரீமியர் லீக்கில் விளையாடுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எதுஎவ்வாறாயினும், இம்முறை லங்கா ப்ரீமியர் லீக் தொடரின் வீரர்களுக்கான ஏலத்தில் ஆரம்பத்தில் 140 வீரர்களை களமிறக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. ஆனால், தற்போது அதனை 270 வீரர்களாக அதிகரிக்க இலங்கை கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதுமாத்திரமின்றி, வெளிநாட்டு வீரர்கள் இலங்கை வந்து 14 நாட்கள் சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதாலும், ஐ.பி.எல் போட்டித் தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் இலங்கை வந்து சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என்பதாலும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த லங்கா ப்ரீமியர் லீக் தொடரை 2 வாரங்கள் கழித்து நவம்பர் 21ஆம் திகதி முதல் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.