TAMIL

ரஞ்சி கிரிக்கெட்டில் தமிழ்நாடு-பரோடா அணிகள் மோதும் ஆட்டம் இன்று தொடக்கம்

86-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் இன்று காலை 9.30 மணிக்கு வதோதராவில் தொடங்கும் லீக் ஆட்டத்தில் தமிழ்நாடு அணி, பரோடாவை எதிர்கொள்கிறது.

தமிழக அணி இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, 2 தோல்வி, 3 டிரா கண்டுள்ளது.



பரோடா அணி 6 ஆட்டத்தில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்வி, 2 டிரா கண்டுள்ளது.

டெல்லி-குஜராத் அணிகள் இடையிலான லீக் ஆட்டம் டெல்லியில் இன்று தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான டெல்லி அணியில் வேகப்பந்து வீச்சாளர் அங்கித் பெனிவால் புதுமுக வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.

போதிய திறமை இல்லாத அவர் சிபாரிசின் அடிப்படையில் அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker