TAMIL
மிஸ் யூ டோனி! இந்திய அணியில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் நிலையில் ரசிகர்களின் நெகிழ்ச்சி செயல்

நியூசிலாந்து அணியின் நான்காவது டி-20 போட்டியில் ரசிகர்கள் மிஸ் யூ தோனி என்ற பேனரை வைத்திருந்தது வைரலாகியுள்ளது.
நியூசிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி முதலில் 5 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்கிறது.
இதன் முதல் மூன்று டி-20 போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 4-0 என முன்னிலை பெற்றது.
இரு அணிகள் மோதும் கடைசி டி-20 போட்டி இன்று மவுண்ட் மாங்கானியில் நடக்கிறது.
இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் அணியின் ரசிகர்கர்கள் சிலர் மிஸ் யூ டோனி என்ற பேனர் வைத்திருந்தனர்.
ரசிகர்கள் மத்தியில் டோனியின் வருகை குறித்து நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் வருகை குறித்தும் அல்லது ஓய்வு குறித்தும் டோனி தனது நிலைப்பாட்டை இதுவரை வெளியிடவில்லை.
கடந்த ஆண்டு இங்கிலாந்தில் நடந்த 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி தோல்விக்கு பின் இந்திய அணியில் டோனி தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.