TAMIL
மறக்க முடியாத அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் – ஹர்பஜன் சிங்
2011 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தோனி தலைமையிலான இந்திய அணி கோப்பையை வென்று அதில் உலகக் கோப்பையையும் சச்சினையும் தூக்கி வைத்துக்கொண்டு மும்பை வான்கடே மைதானம் முழுவதும் வலம் வந்த தருணம் அனைவராலும் மறக்க முடியாத ஒரு அழகிய தருணமாக அமைந்திருந்தது.
இந்த அழகிய தருணம் குறித்து ஹர்பஜன் சிங் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியொன்றில் விவரித்துள்ளார்.
அதில் அவர் கூறுவதாவது,
“சச்சின் அன்றுதான் முதல்முறையாகத் தன்னைச் சுற்றி இருப்பவர்களைப் பற்றி கவலைப்படாமல் அவர் நடனமாடியதைப் பார்த்தேன்.
இதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கின்றேன்.
அதுமட்டுமின்றி அன்றிரவு தூங்கும்போது எனக்கு அளிக்கப்பட்ட பதக்கத்தை கழுத்தில் மாட்டியவாறே தூங்கினேன்.
அடுத்த நாள் காலையில், படுக்கையில் என் அருகில் பதக்கத்தை பார்த்த போது அது அற்புதமாக இருந்தது.
எங்கள் கனவாக உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்பது மட்டுமே இருந்தது. அது நடந்தபோது மறக்க முடியாத அனுபவமாக மாறியது.
இப்போதும் அதை நினைத்துப் பார்த்தால் அப்படியே சிலிர்க்கும்.
மேலும் உலகக் கோப்பையைக் கையில் ஏந்தியபோது அனைவரின் முன்பும் நான் அழுதேன்” என்று தனது நினைவலைகளை பகிர்ந்து கொண்டுள்ளார்.