CRICKETLATEST UPDATESNEWSTAMIL
பொறுப்பற்ற நிலை இல்லாத நம்பிக்கை, முன்னோக்கி செல்ல உத்வேகமாக இருக்கும்: பும்ரா
ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் இன்று மெல்போர்னில் தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்ரேலியா முதல் இன்னிங்சில் 195 ரன்னில் சுருண்டது. பும்ரா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும், முகமது சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. முதல் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது. அடிலெய்டு டெஸ்டில் 36 ரன்னில் சுருண்ட இந்தியா, தற்போது 1 விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் எடுத்துள்ளது.
இன்றைய ஆட்டத்திற்குப்பின் பும்ரா போட்டி குறித்து கூறுகையில் ‘‘எங்களுடைய மனதில் பழையதை புகுத்தி வைத்திருக்க விரும்பவில்லை. நேர்மறையாக இருக்க விரும்புகிறோம். கட்டுப்படுத்தக்கூடியதை கட்டுப்படுத்தவும். பொறுப்பற்றத்தன்மையுடன் இருக்காமல் நம்பிக்கையோடு விளையாடுவது முன்னோக்கி செல்ல உத்வேகமாக இருக்கும்.
காலையில் விளையாடும்போது ஆடுகளத்தில் சற்று ஈரப்பதம் இருந்தது. ஆகவே, அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் பந்து வீசியதை நீங்கள் பார்க்க முடிந்தது. ஏனென்றால், நாங்கள் ஆடுகளத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது அஸ்வினை பயன்படுத்த முயற்சிப்போம். அஸ்வின் சிறப்பாக பந்தை பவுன்சராக வீசினார்.
பந்து வீச்சாளர்களுக்கும் கேப்டனுக்கும் இடையில் தொடர்ந்து ஆலோசனை நடைபெற்றது. முதல் செசனுக்குப்பின் ஆடுகளம் மாற்றம் அடைந்தது. பனி மறைந்த பின் பேட்டிங் செய்ய ஆடுகளம் சாதகமாக இருந்தது.
நாங்கள் எந்த லைனில், எப்படி பந்து வீச வேண்டும் என்பது குறித்து ஆலோசனை நடத்தினோம். ஆடுகளம் திட்டத்திற்கு உதவி செய்யவில்லை எனில், லைன் போன்றவற்றை மாற்ற நாம் முயற்சி செய்ய வேண்டும்.
எங்களால் இரண்டு முனையில் இருந்தும் நெருக்கடியை உருவாக்க முடியும் என்று நினைக்கவில்லை. முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசினார். நாங்கள் ஒருவருக்கொருவர் உதவ முயற்சி செய்வோம்.
முகமது சிராஜ் மிகவும் பயிற்சி மேற்கொண்டார். முதல் செசனில் பந்து வீச ஆர்வமாக இருந்தார். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. உணவு இடைவேளைக்குப்பின் சிராஜ் கட்டுப்பாடுடன் சிறப்பாக பந்து வீசினார். முதல் போட்டியிலேயே சிறப்பாக பந்து வீசினார். அவரது திறமைக்கு நம்பிக்கை உதவியாக இருந்தது.
மெல்போர்ன் ஆடுகளத்தில் 2-வது நாள் போட்டிங் செய்யும் அணி பெரும்பாலும் வெற்றி பெறும் என புள்ளிவிரம் கூறுகிறது எனச் சொல்லப்படுகிறது. அதுகுறித்து யோசிக்கவில்லை. எங்கள் கைகளில் உள்ள விசயங்களில் கவனம் செலுத்த விரும்புவோம். நாளை காலை முதல் செசன் மீது கவனம் செலுத்துவோம்’’ என்றார்.