TAMIL
பென் ஸ்டோக்சுக்கு நிகர் இப்போது யாரும் இல்லை: கம்பீர் கணிப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஆல்-ரவுண்டராக பிரமாதப்படுத்தி வருகிறார். அவருடன் ஒப்பிடக்கூடிய அளவுக்கு இப்போது எந்த வீரரும் இந்தியாவில் இல்லை.
ஏனெனில் பென் ஸ்டோக்ஸ் தனித்துவமாக திகழ்கிறார். டெஸ்ட், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் விளையாடும் விதத்தை பார்க்கும் போது இந்தியாவில் மட்டுமல்ல, உலகிலேயே எந்த வீரரும் அவருக்கு நெருக்கமாக கூட வரவில்லை. அவரை போன்று தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வீரர் எந்த அணிக்கும் தேவையாகும்.
பேட்டிங், பந்து வீச்சு, பீல்டிங் மூன்று துறையிலும் அசத்துகிறார். ஸ்டோக்ஸ் போன்ற வீரர் அணியில் அங்கம் வகிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கேப்டனின் கனவாக இருக்கும்.
நிறைய வீரர்கள் அவரை போன்று விளையாட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக உலக கிரிக்கெட் அரங்கில் இப்போது யாரும் இல்லை.
இவ்வாறு கம்பீர் கூறினார்.