CRICKETLATEST UPDATESNEWSTAMIL

பாக்சிங் டே டெஸ்ட்- முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 36/1

இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மெல்போர்னில் இன்று தொடங்கியது. பாக்சிங் டே டெஸ்ட் என அழைக்கப்படும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது.

துவக்கத்தில் இருந்தே இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் தடுமாறிய ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள், விரைவில் விக்கெட்டுகளை இழந்தனர். லபுசாக்னே, டிராவிஸ் ஹெட் இருவரும் நிதானமாக விளையாடி, அணியை சரிவில் இருந்து ஓரளவு மீட்டனர். எனினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்ததால், ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா தரப்பில் பும்ரா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அஷ்வின் 3, முகமது சிராஜ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இதையடுத்து இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. துவக்க வீரர் மயங்க் அகர்வால் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அதன்பின்னர் சுதாரித்த ஷுப்மான் கில், புஜாரா ஜோடி நிதானமாக விளையாடியது.

இதனால் முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்கள் சேர்த்துள்ளது. ஆஸ்திரேலியாவை விட 159 ரன்கள் பின்தங்கி உள்ளது. ஷுப்மான் கில் 28 ரன்களுடனும், புஜாரா 7 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். நாளை 2ம் நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker