TAMIL
பழம்பெரும் கிரிக்கெட் வீரரும் வரலாற்றாசிரியருமான வசந்த் ராய்ஜி காலமானார்!

இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பாகவே தனது கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கியவர் முன்னாள் முதல் தர கிரிக்கெட் வீரர் வசந்த் ராய்ஜி மும்பையில் காலமானார்.
கிரிக்கெட்டர் மற்றும் வரலாற்றாசிரியர் என பன்முகம் கொண்டிருந்தவர் வசந்த் ரய்ஜி.
இவர் தனது முதல் தர கிரிக்கெட் வாழ்க்கையை 1939ம் ஆண்டில் அப்போதைய கிரிக்கெட் கிளப் ஆஃப் இந்தியா (CCI) அணிக்காக களமிறங்கி தொடங்கினார். இப்போட்டி நாக்பூரில் நடந்தது.
தனது முதல் போட்டியிலேயெ ரன் ஏதும் இல்லாமல் டக் அவுட் ஆனார். அடுத்த இன்னிங்ஸில் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இருப்பினும் அது அவரது திறனை அதிகரித்துக் கொள்வதன் அவசியத்தை கற்றுத்தந்தது.
பின்னர் அவர் பாம்பே (மும்பை) அணிக்காக ஆடினார். இவரது சமகால வீரர்களாக லாலா அமர்நாத், விஜய் மெர்சண்ட், சி.கே.நாயுடு மற்றும் விஜய் ஹசாரே இருந்தனர்.
தெற்கு மும்பையில் இந்திய அணி பாம்பே ஜிம்கானா மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது வசந்திற்கு வயது 13. அன்றிலிருந்து இன்றைய இந்திய அணியின் அனைத்து போட்டிகள் குறித்த தகவல்களையும் தொகுத்து வைத்திருந்தார்.
இந்த ஆண்டு ஜனவரியில் அவர் தனது 100வது பிறந்த நாளை கொண்டாடினார்.
கிரிக்கெட் ஜாம்வன்களான சச்சினும், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாஹும் நேரில் சென்று அவரின் 100வது பிறந்த தினத்தில் கேக் ஊட்டினர்.
இதனை தனது டுவிட்டர் பக்கத்திலும் சச்சின் வீடியோவாக பதிவிட்டிருந்தார்.
பழங்கால கிரிக்கெட் வீரர்களான சி.கே.நாயுடு, விக்டர் டிரம்பர், எல்.பி.ஜெய் ஆகியோர் குறித்து நூல் எழுதி வெளியிட்டுள்ளார்.