TAMIL
நியூசிலாந்து பேட்ஸ்மேன்களை ஏமாற்ற நினைத்து சொதப்பிய இந்திய வீரர்: அம்பயரிடமிருந்து தப்பினார்

நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில், மனிஷ் பாண்டே ஏமாற்றும் விதமாக பீல்டிங் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, நியூசிலாந்து நிர்ணயித்த இமாலய இலக்கை அசால்ட்டாக எட்டிப் பிடித்து வரலாற்று வெற்றி பெற்றது.
இந்நிலையில் போட்டியின் போது, ஆட்டத்தின் கடைசி ஓவரை பும்ரா வீசினார்.
இதை எதிர் கொண்ட நியூசிலாந்து வீரர் ரோஸ் டெய்லர் அடித்து ஆட, அப்போது அங்கு பீல்டிங் நின்று கொண்டிருந்த மணீஷ் பாண்ட பந்தை பிடிக்க வேகமாக ஓடி வந்தார்.
ஆனால் பந்தை அவர் பிடிக்காமல், பிடித்து போல் செய்கை செய்து நியூசிலாந்து வீரர்களை ஏமாற்ற நினைத்தார்.
ஆனால் அவர் விட்ட பந்தை பின்னால் எடுத்த ஜடேஜா, வேகமாக பந்தை எடுத்து ரன் அவுட்டிற்கு வீச, அங்கு பேக் அப்பிற்கு பீல்டர் இல்லாததால், தேவையில்லாமல் மூன்று ஓட்டங்கள் என்று மொத்தம் நான்கு ஓட்டங்களை நியூசிலாந்து வீரர்கள் ஓடி எடுத்தனர்.
இதைக் கண்ட கோஹ்லி, கோபம் கொண்டார். அதுமட்டுமின்றி கிரிக்கெட் விதிப்படி பீல்டர்கள் இப்படி ஏமாற்றக் கூடாது, அப்படி ஏமாற்றினால் 5 ஓட்டங்கள் அபராதம் வழங்கப்படும்.
ஆனால் இந்த போட்டியில் நடுவர்கள் அதை கவனிக்காத்தால், அபராதத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகிறது.
Should that be 5 penalty runs for fake fielding? #NZvIND pic.twitter.com/X6LZ1CPZ3h
— Michael Wagener (@Mykuhl) January 24, 2020




