TAMIL
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்; இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா நீக்கம்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இந்த போட்டிகள் வருகிற அக்டோபர் 2ந்தேதி விசாகப்பட்டினம் நகரில் தொடங்குகிறது.
இந்த தொடரில் கீழ் முதுகில் ஏற்பட்ட காயத்தினால் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா விளையாடவில்லை. இதுபற்றி பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள செய்தியில், வழக்கம்போல் நடந்த பரிசோதனையில் இந்த காயம் கண்டறியப்பட்டது. அவருக்கு தேசிய கிரிக்கெட் அகாடெமியில் சிகிச்சை வழங்கப்பட உள்ளது. பி.சி.சி.ஐ. மருத்துவ குழு கண்காணிக்கும். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவ் தொடரில் விளையாடுவார் என அனைத்து இந்திய மூத்த தேர்வு குழு அறிவித்து உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. நடந்து முடிந்த டி20 போட்டி தொடரிலும் பும்ரா விளையாடவில்லை. அந்த தொடர் 1-1 என்ற புள்ளி கணக்கில் சமனில் முடிந்தது.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் விவரம்:
விராட் கோலி (கேப்டன்), மயங்க் அகர்வால், ரோகித் சர்மா, சேத்தேஷ்வர் புஜாரா, அஜிங்கியா ரகானே (துணை கேப்டன்), அனுமா விஹாரி, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), விரித்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், முகமது சமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆவர்.