TAMIL
தென்ஆப்பிரிக்க அணியின் பேட்டிங் ஆலோசகராக காலிஸ் நியமனம்

தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக முன்னாள் ஆல்-ரவுண்டரான 44 வயது காலிஸ் நேற்று நியமிக்கப் பட்டார்.
தென்ஆப்பிரிக்காவின் தற்போதைய கோடைகாலம் சீசன் முழுவதும் அவர் இந்த பதவியில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் உடனடியாக அணியினருடன் இணைகிறார்.
தென்ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளராக மார்க் பவுச்சர் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.