TAMIL
திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது: டோனியின் தலைமையை சாடிய பிரபல வேகப்பந்துவீச்சாளர்
மகேந்திர சிங் டோனி அணித் தலைவராக இருந்த போது தங்களால் அதிக அளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனதாக வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
டோனி அணித்தலைவராக இருந்த காலத்தில் தங்களுக்கு போதுமான விளையாட்டு அனுபவம் கிடைக்கவில்லை எனவும் இஷாந்த் ச்ர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.
அப்போது அணியில் 6 முதல் 7 வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்ததால், அவர்களை சுழற்சி முறையில் டோனி பயன்படுத்துவார்.
அதனால் பந்துவீச்சாளர்களிடையே போதுமான புரிதலும், ஒருங்கிணைப்பும் இல்லாமல் இருந்ததாக இஷாந்த் சர்மா குற்றஞ்சாட்டியுள்ளார்.
தற்போது கோஹ்லியின் தலைமையில் 3 முதல் 4 பத்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்டுத்தப்படுவதால் அவர்களிடையே நல்ல ஒருங்கிணைப்பும் புரிதலும் உள்ளது.
குறைவான பந்துவீச்சாளர்கள் மட்டுமே இருப்பதால் அவர்களுக்கு அதிக அனுபவமும் அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
டோனி அணித் தலைவராக இருந்த காலத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக போட்டிகளில் விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.
இந்திய அணியை பொறுத்தவரை, அதிகபட்சமாக கபில் தேவ் 131 டெஸ்ட் போட்டிகளிலும் அதற்கடுத்ததாக ஜாகீர் கான் 93 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளனர்.
96 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா இன்னும் 4 போட்டிகளில் விளையாடினால் 100 போட்டிகளில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் என்ற பெருமையை பெருவார் என்பது குறிப்பிடத்தக்கது.