TAMIL
டேவிஸ் கோப்பை டென்னிஸ்: சசிகுமார் விலகல்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியில் ஆசிய-ஓசியானா குரூப்-1 சுற்றில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் கஜகஸ்தான் தலைநகர் நூர் சுல்தானில் வருகிற 29, 30-ந் தேதிகளில் நடக்கிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் மாற்று வீரராக இடம் பிடித்து இருந்த சசிகுமார் முகுந்த் காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி இருக்கிறார். இந்த தகவலை இந்திய அணியின் பயிற்சியாளர் ஜீசன் அலி தெரிவித்தார். இது குறித்து அவர் கூறுகையில், ‘போர்ச்சுகல் நாட்டில் நடந்த போட்டியில் விளையாடிய போது சசிகுமார் முகுந்த் காயம் அடைந்ததால் எதிர்பாராதவிதமாக அவர் இந்திய அணியினருடன் இணைந்து பயணிக்க முடியவில்லை’ என்றார்.