TAMIL
டிக்டாக் வீடியோவில் தெறிக்கவிட்ட டேவிட் வார்னர்; ட்ரோல் செய்த மிட்செல் ஜான்சன்
டேவிட் வார்னர் அதிரடியான பேட்டிங்கிற்கு பெயர் பெற்றவர். கொரோனா லாக் டவுன்னுக்கு மத்தியில் தனது வேடிக்கையான டிக்டாக் வீடியோக்களால் பிரபலமாகி உள்ளார்.
கடந்த மாதம் பிரபலமான வீடியோ பகிர்வு மூலம் அவர் தொடர்ச்சியாக வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் இந்தி பாடலுக்கு அவர்தன் மனைவி கேண்டிஸ் மற்றும் குழந்தைகளும் வீடியோவில் அசத்தினார்.
அவருடைய சமீபத்திய வீடியோவை, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மிட்செல் ஜான்சன் கிண்டல் செய்துள்ளார்.
மிட்செல் ஜான்சன் வார்னரின் சமீபத்திய டிக்டாக் வீடியோவைப் பார்த்த பிறகு அவரை ட்ரோல் செய்து, தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்துள்ளார்.
வார்னரின் வீடியோவை கிண்டல் செய்த ஜான்சன், இதையெல்லாம் செய்யத் தேவையில்லை என்று கூறியுள்ளார்.
வார்னரின் வீடியோவிற்கு பதில் அளித்த ஜான்சன் (இந்த வீடியோஸ் விஷயத்தில) நீ அதிகாரப்பூர்வமா தோத்துப் போயிட்டேனு நினைக்கிறேன்.
அதே நேரத்துல நீ அதுல கெத்தா இருந்தியான்னும் தெரியவில்லை என்று வெளிப்படையாக கூறினார்.
வீடியோவில் வார்னர், பின்னணியில் இசைக்கப்படும் “பம்ப் அப் ஜாம்” பாடலுக்குக் காற்றடிக்கும் பம்ப் கொண்டு சைகை செய்கிறார். இருப்பினும், வார்னர் ஜான்சனின் கருத்துக்களைப் அவர் பொருட்படுத்தவில்லை.