சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் பற்றி டோனி போட்டுள்ள திட்டத்தை, அந்தணியின் நட்சத்திர வீரரான பிராவோ கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடர் துவங்கியதில் இருந்தே, சென்னை அணியின் தலைவராக டோனி நீடித்து வருகிறார். இரண்டு ஆண்டுகள் சென்னை அணி தடை செய்யப்பட்டு மீண்டும் போதும், டோனியே மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.
இதன் மூலம் ஐ.பி.எல் வரலாற்றில் ஒரு அணிக்கு ஒருவரே கேப்டனாக நீடிப்பது டோனி மட்டுமே, டோனி தலைமையிலான சென்னை அணி மூன்று கோப்பையை வென்றுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் இருந்து டோனி ஓய்வு பெற்றாலும் ஐ.பி.எல் தொடரில் இன்னும் சில ஆண்டுகள் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டோனியை தவிர சென்னை அணியில் மற்றவர்களை கேப்டனாக ரசிகர்களால் நினைத்து கூட பார்க்க முடியாது.
இந்நிலையில், டோனிக்கு பின்னர் சென்னை அணியை யார் வழிநடத்துவார்கள் என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
இது தொடர்பாக அந்தணியின் நட்சத்திர வீரரான பிராவோ அளித்த பேட்டி ஒன்றில், டோனியுடன் சிறிது காலங்கள் உடன் இருப்பதால் அவரின் மனதில் இருப்பதை நான் அறிவேன்.
நாம் அனைவரும் ஒரு கட்டத்தில் ஒதுங்க வேண்டும். ஆனால் அது எப்போது என்பதுதான் விஷயம் உள்ளது.
சென்னை அணியின் அடுத்த கேப்டன் யார் என்பது குறித்து யோசனை டோனியின் மனதில் உள்ளது. அது ரெய்னா அல்லது ஒரு இளம் வீரரிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதாகவே உள்ளது என கூறியுள்ளார்.
டோனி ஐ.பி.எல் தொடரில் இருந்தும் ஓய்வு பெற்றாலும், அவர் சென்னை அணிக்கு எப்போதும் ஆலோசகராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.