CRICKETLATEST UPDATESNEWSTAMIL

சிட்னியில் கொரோனா பரவல் – இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய பயணம் தள்ளி வைப்பு

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டியில் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது. முதல் போட்டி வருகிற 22-ந் தேதி கான்பெராவிலும், 2-வது போட்டி 25-ந் தேதி மெல்போர்னிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 28-ந் தேதி ஹோபர்டிலும் நடக்க இருந்தது. 
 
இந்தநிலையில் சிட்னியில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாக இருப்பதையொட்டி இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் ஒருநாள் போட்டித் தொடர் தள்ளி வைக்கப்படுவதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இப்போட்டித்தொடர் 2022-ம் ஆண்டு நடைபெறும் வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகி இருக்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker