TAMIL
சச்சினை விடவும் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன் – டிவில்லியர்ஸ்
இன்ஸ்டாகிராம் லைவ் அமர்வின் போது வர்ணனையாளர் பொம்மி ம்பாங்வாவிடம் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் கூறுகையில்,
சச்சின் எங்கள் இருவருக்கும் ஒரு முன்மாதிரி ஆட்ட நாயகன். அவருடைய காலக்கட்டத்தில் ஆளுமையாக இருந்தது, அவர் செய்த சாதனைகள் போன்றவை மற்ற வீரர்களுக்கான சிறந்த முன்னுதாரணங்கள்.
இலக்கை விரட்டுவதில் விராட் கோலிதான் சிறந்த வீரர்.
எல்லா வகையான கிரிக்கெட் ஆட்டங்கள் மற்றும் சூழல்களுக்கு சச்சின் சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் இலக்கை விரட்டுவதில் முன்னணியில் இருப்பவர் கோலி தான்.
“டென்னிஸ் அடிப்படையில், அவர் ஒரு (ரோஜர்) பெடரரைப் போன்றவர் என்று நான் கூறுவேன், ஸ்மித் ஒரு (ரபேல்) நடால் போன்றவர். ஸ்மித் மனதளவில் மிகவும் வலிமையானவர்
ரன்கள் எடுக்கும் சுலபமான வழிகளைக் கண்டறிந்தவர். மனத்தளவில் ஸ்மித் தான் சிறந்த பேட்ஸ்மேன். கோலியும் உலகம் முழுக்க, பல அழுத்தமான தருணங்களில் ரன்கள் எடுத்து குவித்தவர்.
இவ்வாறு அவர் கூறினார்.