CRICKETLATEST UPDATESNEWSTAMIL

கடைசி டி20 போட்டியில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரை வென்றது பாகிஸ்தான்

 
பாகிஸ்தான் – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் லாகூரில் நடைபெற்றது. முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானும், 2-வது போட்டியில் தென்ஆப்பிரிக்காவும் வெற்றி பெற்றன.
 
தொடரை கைப்பற்றுவதற்கான வெற்றியை தீர்மானிக்கும் 3-வது மற்றும் கடைசி போட்டி லாகூரில் இன்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்தது. டேவிட் மில்லர் அதிகபட்சமாக 45 பந்தில் 5 பவுண்டரி, 7 சிக்சருடன் 85 ரன்கள் விளாசினார்.
 
பின்னர் 165 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. தொடக்க வீரர் முகமது ரிஸ்வான் 30 பந்தில் 42 ரன்கள் அடித்தார். 3-வது வீரராக களம் இறங்கிய பாபர் அசாம் 30 பந்தில் 44 ரன்கள் சேர்த்தார்.
 
ஹசன் அலி ஆட்டமிழக்காமல் 7 பந்தில் 20 ரன்கள் விளாச, பாகிஸ்தான் 18.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-1 என பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளது. தென்ஆப்பிரிக்கா சுழற்பந்து வீச்சாளர் தப்ரைஸ் ஷாம்சி 4 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தியும் பயனில்லை.
 
முகமது நவாஸ் ஆட்ட நாயகன் விருதையும், முகமது ரிஸ்வான் தொடர் நாயகன் விருதையும் வென்றனர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker