அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் வருகை தந்துள்ளனர். இவர்கள் 5 நாட்கள் ஓட்டலில் தனிமைப்படுத்தப்படுகிறார்கள். தனிமைப்படுத்துதலின் போது தங்களது அறையை விட்டு வெளியே வர அனுமதி இ்ல்லை. அத்துடன் 3 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். இதில் கொரோனா பாதிப்பு இல்லை என்று முடிவு வர வேண்டும். அதன் பிறகே பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு சென்னை சூப்பர் அணியின் 2 வீரர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் இந்த முறை கூடுதல் விழிப்புடன் செயல்பட முடிவு செய்யப்பட்டு உள்ளது.
வீரர்களுக்கான பயிற்சி முகாம் வருகிற 9-ந்தேதி தொடங்க இருப்பதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தெரிவித்தார். தற்போது போட்டிகள் இன்றி ஆயத்தமாக உள்ள வீரர்கள் அனைவரும் முகாமில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார். சுரேஷ் ரெய்னா அடுத்த வாரம் பயிற்சி முகாமில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.