IPL TAMILTAMIL

ஐ.பி.எல். கிரிக்கெட் 2020: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டு வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி

துபாயில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் இன்றைய 27வது ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியுடன், ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோதின.

இந்த ஆட்டம் அபுதாபியில் உள்ள ஷேக் சையீத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இறுதியாக 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது. இதனை தொடர்ந்து 163 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி அணித் தரப்பில் ரபாடா 2 விக்கெட்டுகளையும், அக்சர், அஸ்வின் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker